உலக செய்திகள் செய்திகள் டெல்லி செங்கோட்டை சுதந்திர தினவிழா…10 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி பங்கேற்றார்…!!! Sathya Deva15 August 2024085 views டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆவார். இதில் 2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை. ஏனென்றால் எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனால் ராகுல்காந்தி கடந்த ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.