அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் அவர்கள் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை அதிபர் வேட்பாளராக தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் கமலா ஹாரிஸ்க்கு ஜனநாயக கட்சியின் ஆதரவு அதிகரித்தது எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு நன்கொடை குவிந்து வருகிறது எனும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன.
இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 42 சதவீதமாகவும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 44 சதவீதமாகவும் தனது ஆதரவை பெற்றுள்ளனர் . இதில் கமலா அவர்கள் இரண்டு சதவீதம் அதிகமான புள்ளிகள முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. கமலா ஹரிஷ் கடந்த வாரம் தான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ்க்கு அதிகமான ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோ பைடன் ரெண்டு புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும்போது டிரம்ப் ரெண்டு புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிஸ் ட்ரம்ப்வுக்கு கடும் போட்டியாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது.