ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…! அனைவரிடத்திலும் நல்ல பெயர் கண்டிப்பாக எடுப்பீர்கள்…! சுற்றுப்புறத் தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் பாதிக்கப்படும்…!! Rugaiya beevi10 December 2024025 views தனுசு ராசி அன்பர்களே…! வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் வல்லவராக காணப்படுவீர்கள். சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்திவிடும் பார்த்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். உத்தியோகம் சுமாராக இருந்தாலும் வருமானம் கிட்டும். பண வரவு சராசரி அளவிலே இருக்கும். விட்டுப் போன உறவால் நித்திரை கொஞ்சம் தாமதம் ஆகும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது எதிலும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கவனமாக பணிகளை மேற்கொண்டால் வெற்றி கிட்டும். முன்னறிவால் எல்லா விஷயங்களையும் சரியாக புரிந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்வீர்கள். போட்டி பொறாமைகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டாகும். பழைய பாக்கி வசூல் ஆகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்கள் உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பணி சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழ்ந்து காட்டுவீர்கள். பெண்களுக்கு சுப போக வாழ்க்கை அமைந்துவிடும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் நன்மையை ஏற்படுத்தும். மாணவர்கள் எதிலும் யோசித்து முடிவு காண்பது நல்லது. மாணவர்கள் விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மட்டும் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.