தனுசு ராசி அன்பர்களே…! அற்புதங்கள் நிகழும் நாளாக இருக்கும்.
கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனையை சரி செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். கடினமான செயல்களை கூட எளிமையாக செய்வீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்டபடி காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கூடுதலாக உழைத்து முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். சக நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். குடும்பத்துக்கு உதவியாக இருப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் சிரித்து மகிழ்வீர்கள். சுய தொழிலில் லாபம் உண்டாகும். செய் தொழில் நன்மையை ஏற்படுத்தும். கடந்த கால நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். கற்பனைத் திறன் அதிகரிக்கும். பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் இணையகூடம். முன்னேற்றமான நாளாக அமையும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் முடிவுகள் தெளிவாக எடுத்தால் வெற்றி கிடைக்கும்.
பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். சுய தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். முகப்பொலிவும் அழகும் கூடும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பாடங்களில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் உடனே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.