செய்திகள் மாநில செய்திகள் தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன நீர் திறப்பு….கர்நாடக அரசு உத்தரவு…. Sathya Deva18 July 20240100 views கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு கூறியுள்ளது . மேலும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு செல்லும் காவேரி கால்வாயிலும் மற்றும் 1700 கன அடி பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காவிரி மீது பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நுகு அணையில் இருந்தும் 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.