தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் இன்று லேசான முதல் கனமழை பெய்திடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை போன்ற மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் திருப்பூர், திண்டுக்கல், தேனி மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மலையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்ட பகுதிகள் திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 9ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் இடியுடன் கூடிய மழை லேசாக முதல் விதமாக பயப்படும் என்றும் தெரிவித்துள்ளது.