Home செய்திகள் தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!

by Sathya Deva
0 comment

தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுவட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.