நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதில் கூடலூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் சாலையின் பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணத்தால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் சுண்ணாம்பு பாலம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த ஐந்திற்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பின்னர் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலமாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் அடுத்து கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்தை அப்புறப்படுத்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அகற்றியுள்ளனர். இது தொடர்பாக கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் கூறியது, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் 16 இடங்களில் மரங்கள் சாய்ந்தும், 56 இடங்களில் மின் கம்பிகள் அருந்தும் இருப்பதால் அதனை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிறகு வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வருவாய் துறை பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் களத்தில் இருந்து வருகின்றனர். மேலும் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் இருந்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.