செய்திகள் மாநில செய்திகள் தலைநகர் டெல்லியில் கனமழை…3 மாணவர்கள் பலி…!!! Sathya Deva28 July 2024077 views தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மேற்கு பகுதியில் ரகு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம் உள்ளது. அந்த மையத்தில் தரைத்தளத்தின் நேற்று இரவு 7:00 மணி அளவில் சுமார் 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தண்ணீர் புகுந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனால் அந்த பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி ராகுல் காந்தி அவர்கள் அவரது இணைய பக்கத்தில் கூறுகையில் டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பற்ற கட்டுமானம் , மோசமான நகர திட்டமிடல், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை என ஒவ்வொரு நிலையிலும் சாமானிய குடிமகன் தன் உயிரை இழப்பதன் மூலம் விலை கொடுத்து வருகிறார்எனவும் பாதுகாப்பான வசதியான வாழ்க்கை ஒவ்வொரு குடி மகனின் உரிமை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என அதில் குறிப்பிட்டுள்ளார்.