தலைநகர் டெல்லியில் நஜப்கர் நகர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவன் தயக்கத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தான். அதனைப் பார்த்த ஆசிரியர் அந்த சிறுவன் வைத்திருந்த புத்தகப்பையே சோதனை செய்தனர். அந்த புத்தகப்பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு ஆசிரியர் மிரண்டனர். உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் துப்பாக்கி வாங்கி பரிசோதனை செய்து அந்த மாணவரிடம் விசாரணை செய்தனர். அந்த மாணவன் விளையாட்டுப் பொருள் என நினைத்து கொண்டு இருந்ததாக கூறியுள்ளான். மேலும் இது அந்த மாணவனின் தந்தைக்கு சொந்தமானது என்பதும் அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மாணவனின் தந்தை காலமானார் என கூறப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கியின் உரிமை ரத்து செய்யும் நடவடிக்கையில் உள்ளனர். புத்தகப்பையில் துப்பாக்கி கொண்டு வந்த மாணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.