மதுரை மாவட்ட செய்திகள் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!! dailytamilvision.com17 April 20240121 views மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பெருமாள் நகரில் அப்துல் ரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கட்டுவா ஒலி சில்வர் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆடு உரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டுவா ஒலி ஒத்தக்கடை சரோஜினி தெருவில் இருக்கும் ஒரு வீட்டு மாடியில் தலையில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தூங்கும்போது தொழிலாளியின் தலையில் கல்லை போட்டும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.