Home செய்திகள் தலை மற்றும்கழுத்து பகுதியை தாக்கும் புற்று நோய்…. ஆரம்ப பரிசோதனை அவசியம்….!!!

தலை மற்றும்கழுத்து பகுதியை தாக்கும் புற்று நோய்…. ஆரம்ப பரிசோதனை அவசியம்….!!!

by Sathya Deva
0 comment

டெல்லி கேன்சர் முக் பாரத் அறக்கட்டளை மையம் மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்களில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளை தொகுத்து இந்த புற்றுநோய் ஆய்வினை நடத்தி வந்தது. அதில் 1,869 புற்று நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த புற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறுவது இந்தியாவின் அதிக புகையிலை நுகர்வு மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இந்த புற்றுநோய் சுமார் 80 – 90% புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோயினால் முதல் இரண்டு நிலைகளின் நோய் கண்டறியப்படுபவர்களின் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுவார் என்றும் முறையான பரிசோதனை இல்லாததால் இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது என்று கூறியுள்ளார். எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும் நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனை அவசியம் என்கிற விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.