Home » தளபதி கொடுத்த ஊக்கம். ஹாலிவுட் வரை தாக்கம். மனம் திறந்த அட்லீ!

தளபதி கொடுத்த ஊக்கம். ஹாலிவுட் வரை தாக்கம். மனம் திறந்த அட்லீ!

by dailytamilvision.com
0 comment

இயக்குனர் அட்லீ காப்பி அடிபதில் வல்லவர் எனவும், அவர் படங்கள் எளிதில் யூகிக்கக் கூடியதாக ஒரே மாதிரியாக இருக்கும் என பல விமர்சனங்களை ஜவான் வெளியீட்டிற்கு பிறகு பலரும் முன் வைத்து வந்தனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அட்லீ, தன்னை விட திறமையான இயக்குனர்களும், எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அது எனக்கு தெரியும். இருப்பினும்,

ஒவ்வொருவருக்கும் தனித்துவம் என்பது உண்டு. உதராணமாக, எம் ஜி ஆர் அவர்கள் மக்கள் தலைவனாக ஒரு மாஸ் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் அவர்களின் ப்ளூ பிரிண்ட்-ஐ அப்படியே பாலோ செய்து தமிழகத்தின் மாஸ் கதாநாயகனாக சூப்பர் ஸ்டாராக மாறி நின்றார். கமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வது, படங்களை உலகத்தரத்தில் இயக்குவது, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது என கோலிவுட்-ஐ உலக தரத்திற்கு கொண்டு சென்றார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் அவர்கள் மாஸ் கதாநாயகனாக மாறி நிற்க அவருக்கு ஏற்ற கதையை உருவாக்கியிருந்தேன். அதுவே தனக்கு அடையாளமாக மாறிப்போனது.

தன்னுடைய தனித்துவத்தை நிலை நிறுத்தியது. எனவே நான் கமர்சியல் படங்களுக்கான இயக்குனர் என அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். மேலும் விஜய் அவர்களுடன் தொடர்ச்சியாக மூன்று படங்கள் இயக்கியதையடுத்து நான்காவதாக இணையும் சூழ்நிலை இருந்த போது,

அதற்கான  டிஸ்கஷனில் இருக்கும்போது ஷாருக்கான் அவர்களிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக தெரியப்படுத்த, ஓகே நீ  பாலிவுட் செல். ஷாருக்கான் அவர்களை வைத்து இயக்கு. இந்திய சினிமாவிற்கு உன்னுடைய திறமை என்ன என்பதை காட்ட வேண்டிய தருணம் இது. வாய்ப்பு  கிடைத்திருக்கிறது முயற்சி செய் அதை பயன்படுத்து, 

வெற்றியோ தோல்வியோ உனக்கென வசதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல்,  அதை விட்டு வெளியே வந்து கடுமையாக  உழைத்தால் வெற்றி தானாக வரும் என தளபதி விஜய் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். தற்போது ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ அவர்களுக்கு ஹாலிவுட்-லிருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.