செய்திகள் தவறான இணையதள பதிவு…. திருப்பதி தேவஸ்தானம் பதில்…!! Sathya Deva18 July 20240118 views திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தத்தை தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக இணையதளத்தில் தவறான தகவல் வெளியாது. ஆனால் இந்த வதந்திகளை திருப்பதி தேவஸ்தானம் நிராகரித்தது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பதிவில்” ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிக சிறந்த தரத்துடன் தயாராகி வருவதாகும் பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்பி ஏமாற வேண்டாம்” என்றும் கூறியுள்ளது . இணையதளத்தில் பொய்யான தகவல்களை வெளியிடும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது .இந்த லட்டு தயாரிப்பில் தற்போது 980 சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் பழங்காலத்தில் இருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர்களின் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுக்களை தயாரிக்கவும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை சேர்ப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.