தாஜ்மஹால் உள்ளே காவிக்கொடி ஏற்றிய பெண்…பாதுகாப்பு படையினரால் கைது…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி உள்ளது. தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. இவர்கள் தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோவில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக தாஜ்மஹால் உள்ளே கங்கை நீரை தெளிப்பதும் ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என வலதுசாரி இந்து அமைப்புகள் செய்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் சிவபெருமான் கனவில் வந்து கூறியதாக கங்கை நீரை எடுத்து வந்து மீரா ரத்தோர் என்ற பெண் பூஜை செய்து தாஜ்மஹாலில் காவிக்கொடியை ஏற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!