திடீரென விழுந்த பால்கனி சுவர்… பூ வியாபாரி துடிதுடித்து பலி… பெண் படுகாயம்…!!

சென்னை என்.ஜி.ஓ. காலனி கணேஷ் அவென்யூ பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த விஜய லட்சுமி என்பவர் வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு பூ வாங்கியுள்ளார். அப்போது பால்கனியின் சுவர் திடீரென இடிந்து கீழே நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் மேலே இருந்து விழுந்த விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டிடத்தின் உயிரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கட்டிடம் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!