செய்திகள் மாநில செய்திகள் திடீர் கட்டண உயர்வு…. ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் லாபம்… SWIGGY, ZOMATO வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!! Sathya Deva16 July 20240115 views இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான SWIGGY ,ZOMATO நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி மற்றும் பெங்களூரில் ஜூலை 14 முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் நாடு முழுவதும் இந்த கட்டணம் பற்றிய தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி, ஜிஎஸ்டி போல் இல்லாமல் அவர்களது லாபம் நேரடியாக அந்த நிறுவனங்களுக்கே செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு இந்த கட்டணத்தை அமல்படுத்தியுள்ள போது 5 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 6 ரூபாயாக உள்ள நிலையில் விரைவில் 7 ரூபாய் வர அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மூலம் அந்த நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 1.5 கோடி லாபம் எடுக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.