263
சத்தான அசோக அல்வா
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 1/2 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
சர்க்கரை – 4 கப்
கேசரி பொடி- சிறிதளவு
முந்திரி – 10
நெய் – 2 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து பின் அதை நன்கு குழையும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- எண்ணெயில் 1/2 கப் கோதுமை மாவை வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும்.
- வறுத்த கோதுமை மாவுடன் நன்கு குலைய வேக வைத்த பாசிப்பயிறு , 4 கப் சர்க்கரை , சிறிதளவு கேசரி பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- சத்தான சுவையான அசோகா அல்வா தயாரான நிலையில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறலாம்.