சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல் தித்திக்கும் சுவையில் அசோக அல்வா…. செய்து அசத்துங்க….!! Inza Dev8 July 20240263 views சத்தான அசோக அல்வா தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 1/2 கப்கோதுமை மாவு – 1/2 கப்சர்க்கரை – 4 கப்கேசரி பொடி- சிறிதளவுமுந்திரி – 10நெய் – 2 1/4 கப் செய்முறை: ஒரு வாணலியில் மிதமான சூட்டில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து பின் அதை நன்கு குழையும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். எண்ணெயில் 1/2 கப் கோதுமை மாவை வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும். வறுத்த கோதுமை மாவுடன் நன்கு குலைய வேக வைத்த பாசிப்பயிறு , 4 கப் சர்க்கரை , சிறிதளவு கேசரி பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும். சத்தான சுவையான அசோகா அல்வா தயாரான நிலையில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறலாம்.