செய்திகள் மாநில செய்திகள் திரிபுரா மாநிலம்… நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி…!!! Sathya Deva23 August 2024093 views திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 17 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளனர் என்றும் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக திரிபுரா மாநில அரசு குறிப்பிடுகிறது. இதனால் 8 மாவட்டங்களில் 450 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இணையதள பக்கத்தில் கூறுகையில்” திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு ரூபாய் 40 கோடியே முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்”.