Home » திருப்பதியில் தொடங்கும்… நவராத்திரி பிரம்மோற்சவம்… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் இவர்கள் மட்டும்தான்…!!!

திருப்பதியில் தொடங்கும்… நவராத்திரி பிரம்மோற்சவம்… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் இவர்கள் மட்டும்தான்…!!!

by dailytamilvision.com
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி டிரஸ்டுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலமாக வழங்கப்படும் விஐபி தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் என தினந்தோறும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே நான்கு மாடவீதிகளில் அமர வைக்கப்படுவார்கள்.

மேலும் உள்ளூர் பக்தர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் வாகன சேவையை பார்ப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோன பரவலை தடுக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் ஆறு அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கோடுகள் போடப்பட்டுள்ளன. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம், கொடி இறக்கம் மற்றும் தேரோட்டம் ஆகியவை எதுவும் நடைபெறாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.