Home செய்திகள் திருப்பதி ஏழுமலை கோவில்….டிக்கெட் மோசடி…!!!

திருப்பதி ஏழுமலை கோவில்….டிக்கெட் மோசடி…!!!

by Sathya Deva
0 comment

திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாத மக்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார், அதன்படி ஆந்திர மாநில சி.ஐ.டி போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் 10,500 செலுத்தி வாங்க வேண்டிய தரிசன டிக்கெட்களை 14,449 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட்களை குறிப்பிட்ட 545 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் வாங்கி இருப்பது தெரியவந்தது.இந்த 545 பேர் இதுவரை 15,17,14,500ரூபாய் தரிசன டிக்கெட் வாங்க செலவு செய்திருப்பதும் ஒவ்வொருவருக்கும் 2,78,378 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தி ஸ்ரீ வாணி அறக்கடளை தரிசன டிக்கெட் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் பலர் இடை தரகராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் வாங்கிய டிக்கெட்களுடன் தரிசனத்திற்காக அடுத்த முறை திருப்பதிக்கு வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தரிசன டிக்கெட், தங்கும் அறைகளை வாங்கி இருப்பது தெரியவந்து இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.