செய்திகள் தேசிய செய்திகள் திருப்பதி லட்டு விவகாரம்…நந்தினி நெய் பயன்படுத்த உத்தரவு…!!! Sathya Deva20 September 2024046 views கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது. 8 மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது.