சினிமா செய்திகள் தமிழ் சினிமா திருமணத்திற்கு பிறகு படங்களில் தொடர்ந்து நடிப்பேனா? வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்….!!! Sowmiya Balu15 July 2024072 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவரின் திருமண கொண்டாட்டம் கடந்த வாரம் சென்னையில் களைகட்டி இருந்தது. சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சி என பல நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். தாய்லாந்தில் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அதில் ‘திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பீர்களா? ‘ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ”என்னுடைய காதல் அவர். ஆனால் என்னுடைய உயிர் சினிமா தான். எனவே திருமணத்திற்கு பிறகும் கண்டிப்பாக நான் சினிமாவில் நடிப்பேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.