சினிமா செய்திகள் தமிழ் சினிமா “தி கோட்” படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன்- த்ரிஷா… வைரல் புகைப்படம்…!!! Sowmiya Balu5 September 20240116 views இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் திரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தை காண்பதற்கு த்ரிஷா சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த படத்தை திரையரங்குக்கு வந்து கண்டு களித்தார்.