செய்திகள் மாநில செய்திகள் துங்கபத்ரா அணை…19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது…!!! Sathya Deva11 August 2024075 views கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.