தென் ஆப்பிரிக்கா அழகிப்போட்டி…காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் தேர்வு…!!!

தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தை பெற்றார். மியா லு ரூக்ஸ் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.

பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்’ என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன் என கூறினார் .

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!