செய்திகள் மாநில செய்திகள் தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்த கட்டுப்பாடு…போதைப்பொருள் தனிப்பிரிவு போலீசார்…!!! Sathya Deva14 August 20240120 views தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு பாட்டில் மதுவுக்கு மேல் வாங்கி விருந்து வைத்தால் கட்டாயம் அதற்கு அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளது.மேலும் இந்த விருந்தை காலை 11 மணி மற்றும் மாலை 4 மணி என 2 நேரங்களில் மட்டுமே மது விருந்து தொடங்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மது விருந்தினை வீடுகள் மற்றும் விடுதிகளின் நடத்தினால் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஹோட்டல்களில் மது விருந்து நடத்தினால் டிக்கெட் எண்ணிக்கை குறித்து கட்டணங்கள் மாறுபடும். இந்நிலையில் 21 வயதுக்கு உட்பட்டவருக்கு எந்த காரணத்தை கொண்டும் மது அளிக்கக்கூடாது என்ற கடுமையான நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அனுமதி இன்றி மது விருந்து நடத்தினால் இடத்தின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.