செய்திகள் மாநில செய்திகள் தெலுங்கானா மாநிலம்…சாலையில் பணத்தைபறக்கவிட்ட யூடியூபர் கைது… Sathya Deva25 August 2024086 views தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்