செய்திகள் மாநில செய்திகள் தெலுங்கானா மாநிலம்….17 மணி நேரம் நடந்த சட்டசபையா…? Sathya Deva1 August 20240104 views தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 31 ஆம் தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தது. இதில் மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் சார்பாக விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை இரவிலும் நீடித்தது. மேலும் உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அன்று மறுநாள் அதிகாலை 3 .15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் 17 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் 70 சதவீதத்திற்கு அதிகமான எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக என்டி ராமராவ் முதல் மந்திரி ஆக இருந்தபோது ஒரு முறை அதிகாலை 2 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது என்றும் சந்திரசேகர ராவ் ஆட்சியில் இருந்தபோது இரண்டு முறை நள்ளிரவு ஒரு மணி வரை சட்டசபை நடந்ததாகவும் கூறப்படுகிறது.