Home சினிமா செய்திகள் ” தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்”… “ராயன்” பட வெற்றிக்கு துஷரா விஜயன் நன்றி பதிவு…!!!

” தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்”… “ராயன்” பட வெற்றிக்கு துஷரா விஜயன் நன்றி பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ”ராயன்”. இவரின் 50 ஆவது படத்தை இவர் நடித்தும் இயக்கியும் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. துஷரா விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ”இயக்குனர் தனுஷுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும், தொடர்ந்து உங்களை மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன்” என கூறி அனைவருக்கும் நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.