செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!! Gayathri Poomani28 June 20240100 views நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா அத்திகள் மற்றும் பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருக்கும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணத்தினால் கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மற்றும் மின்தடை ஆகி இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை காரணத்தினால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.