இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும். தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.