தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் மட்டும் வேலை…புதிய சட்டம் அமுல்…!!!

தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்ற பின்பும் சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களை கேட்பது நாம் அறிவோம். அதை போன்று வார விடுமுறை நாட்களிலும் நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் அமைகிறது. இதனால் வீட்டிற்கு வந்த பிறகும் அலுவலகத்தை பற்றிய சிந்தனை உள்ளதாக அமைகிறது. இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவதில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த குறையை போக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமைகளை வழங்க பிரான்ஸ், ஸ்பெயின். பெல்ஜியம், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை முடிந்த பின் நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அலுவலகத்தில் இருந்து ஏதேனும் முக்கியமான அழைப்புகள் வந்தால் மட்டுமே அதை எடுக்கலாம் அல்லது அந்த அழைப்புகளை நிராகரிக்கலாம் என்று சட்டம் வந்துள்ளது. இந்த சட்டமானது ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஸ்திரேலிய நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி கூறியுள்ளது. இந்த சட்டமானது வரும் 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!