தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் – தேமுதிக விஜய பிரபாகரன்

நடைபெற்று முடிந்த 18 வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் முதன் முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியுற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் விருதுநகரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு விஜய பிரபாகரன் நேற்று முன் தினம் நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் “சூழ்ச்சி துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டதால் கோபமும் ஆதங்கமும் உள்ளது. தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும். என்னுடைய தோல்வியை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரமாக பார்க்கிறேன்” என கூறினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!