சினிமா செய்திகள் தமிழ் சினிமா நகுல் நடிக்கும் “வாஸ்கோடகாமா”… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu14 July 20240124 views தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜி.கே இயக்கும் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடிக்கிறார். எம்.எஸ் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண் என்.வி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாகவும், இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.