இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ”விடாமுயற்சி”. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இன்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.