ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக மோகன் பகவத் இருக்கிறார். அவரது பாதுகாப்பு நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக மோகன் பகவத்துக்கு தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டஅளிக்கப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு இணைப்பு (ஏ.எஸ்.எல்) பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.மோகன் பகவத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை இறுதி செய்யப்பட்டது.