Home செய்திகள் நள்ளிரவு 2 மணிக்கு நீதிபதிக்கு பாராட்டு…ராஜீவ் காந்தி…!!!

நள்ளிரவு 2 மணிக்கு நீதிபதிக்கு பாராட்டு…ராஜீவ் காந்தி…!!!

by Sathya Deva
0 comment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜிவ் காந்தி குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். “ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில் தேசத்தின்நலனுக்காக உழைத்த உணர்வுப்பூர்வமான பிரதமர். அவர் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தவர்” என்று அவர் செல்ல தயாராக இருந்தவர்” என்று அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “80களில், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, நான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தேன்.

சில தனியார் நிறுவனங்கள், அரசு விதித்த அதிகப்படியான கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. தனியார் நிறுவனங்கள், அரசு விதித்த அதிகப்படியான கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. தனியார் நிறுவனங்களின் அந்த கோரிக்கையை நான் நிராகரித்தேன்.நான் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக என்னை சந்திக்க நள்ளிரவு 2 மணிக்கு அவரது இல்லத்திற்கு வருமாறு ராஜிவ் காந்தி அழைத்தார். நான் வழங்கியது ஒரு சிறந்த தீர்ப்பு என்று அவர் என்னிடம் தெரிவித்தார்” என்று கோல்சே பாட்டீல் கூறினார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.