செய்திகள் மாநில செய்திகள் நவீன் திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற புது மாப்பிள்ளை… மாரடைப்பால் இறந்ததால் பரப்பரப்பு…!!! Sathya Deva24 August 2024079 views திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் நவீன் (வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் நவீன் திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது 2350 வது படியில் நவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நவீனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கண்ட அவரது புது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த புது மாப்பிள்ளை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.