உலக செய்திகள் செய்திகள் நாசா பிளான்ட் 9 ஆய்வு…விண்வெளியில் மர்ம பொருளா…? Sathya Deva19 August 2024091 views ஆகாயத்தின் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்றும் அறியப்படாமல் இருக்கின்றது. அதனை கண்டறிய அறிவியல் வளர்ச்சி நமக்கு உதவியாக அமைந்து வருகிறது. நாசா பிளான்ட்9 திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ஒரு மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்ம பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. விண்வெளியே விட்டு இந்த பொருளானது ஒரு மில்லியன் மையில் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை உறுதியாக விண்கலாகவோ நட்சத்திரமாகவோ சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளனர் இந்த பொருளின் மையத்தின் நைட்ரஜன் காணப்படுகிறது. எனவே இதை வாயு நடந்த நட்சத்திர கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வகைக்கும் இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.