உலக செய்திகள் செய்திகள் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினம்…பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்…!!! Sathya Deva15 August 20240120 views நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 11 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். பின்பு செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள் என்றும் இந்த நாடு அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று நாம் 140 கோடி மக்களாக இருக்கிறோம் எனவே நாம் ஒன்றுபட்டால் 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம் என தெரிவித்தார். இந்த ஆண்டும் கடந்த சில ஆண்டுகளும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இதனால் பலர் தங்கள் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்துள்ளதாக கூறினார். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் இருக்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன் எனவும் தெரிவித்தார். உலகில் மிகப்பெரிய உற்பத்தி மயமாக இந்தியா உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் இந்த பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெறுவதாகவும் நாடு முழுவதும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ள தொடங்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் எனக்கு கூறப்படுகிறது.