245
- இப்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் இனிப்பு புளிப்பு என இரண்டு சுவையும் கலந்துள்ள. நாவல் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், இரும்பு சத்து, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
- குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் நாவல் பழத்தில் உள்ளது இது மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதை கட்டுப்படுத்த உதவும்.
- நாவல் பழத்தில் அந்தோசஙயின்கள், பிளா வனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளது இது புற்றுநோய் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
- நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்துக்கும், குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும், மல சிக்கலை தடுக்கவும் இது உதவும்.
- நாவல் பழத்தின் இலைகள் மற்றும் பட்டைகள் வாய்ப்புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.
- குழந்தைகள் 50 முதல் 75 கிராம் வரை உட்கொள்ளலாம். அதே நேரம் அவர்களுக்கு செரிமான பிரச்சனையோ ஒவ்வாமையோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுவது முக்கியமானது.
- மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 200 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம்.
- சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம் இது ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
- இரைப்பை உடல் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம் ஏனெனில் இந்த நாவல் பழத்தினில் ஆக்சலேடுகள் உள்ளது அதனால் இதனை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.