மருத்துவம் லைப் ஸ்டைல் நாவல் பழ சீசன் வந்திருச்சு!!! நாவல் பழத்தின் நன்மைகள்!!! Inza Dev8 July 20240246 views இப்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் இனிப்பு புளிப்பு என இரண்டு சுவையும் கலந்துள்ள. நாவல் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், இரும்பு சத்து, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் நாவல் பழத்தில் உள்ளது இது மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதை கட்டுப்படுத்த உதவும். நாவல் பழத்தில் அந்தோசஙயின்கள், பிளா வனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளது இது புற்றுநோய் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்துக்கும், குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும், மல சிக்கலை தடுக்கவும் இது உதவும். நாவல் பழத்தின் இலைகள் மற்றும் பட்டைகள் வாய்ப்புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் 50 முதல் 75 கிராம் வரை உட்கொள்ளலாம். அதே நேரம் அவர்களுக்கு செரிமான பிரச்சனையோ ஒவ்வாமையோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுவது முக்கியமானது. மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 200 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம் இது ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இரைப்பை உடல் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம் ஏனெனில் இந்த நாவல் பழத்தினில் ஆக்சலேடுகள் உள்ளது அதனால் இதனை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.