திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்க தாமதம்…. வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!! dailytamilvision.com17 April 20240121 views தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் திருச்சி வாழவந்தான் கோட்டையில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மொத்தம் 30 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த நிகழ்ச்சிகளுக்கான விழா மேடை தாமதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காணொளி காட்சிக்கான இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என தெரிகிறது. இது போன்ற காரணங்களுக்காக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.