Home செய்திகள்உலக செய்திகள் நியூயார்க் பூங்காவில் துப்பாக்கி சூடு….இளைஞர் ஒருவர் பலி…!!!

நியூயார்க் பூங்காவில் துப்பாக்கி சூடு….இளைஞர் ஒருவர் பலி…!!!

by Sathya Deva
0 comment

அமெரிக்கா வன்முறைகளின் உற்பத்திக் களமாக மாறி வருகிறது. அதனை நிரூபிக்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் வாரத்துக்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது. அந்த வகையில் நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6:20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் பூங்காவில் இருந்தவர்களின் 6 பேர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிக் கொண்டு வருகிறனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டபூர்வமாக துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகை கடையில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் எடுத்துக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.