செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!! Revathy Anish1 July 2024080 views சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பி ஒன்று அவரின் உள்ளங்கையில் அறுத்து அதிக ரத்தம் வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த கம்பியை அறுத்து பவித்ராவை மீட்டனர். தற்போது அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.