செய்திகள் மாநில செய்திகள் நீட் தேர்வு குறித்து கடிதம்…கர்நாடக அரசு…!!! Sathya Deva24 July 2024061 views இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. அந்த நீட் தேர்வு குறித்து பல புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாராட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் பெற்றது போன்ற பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வில் ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, இமாச்சலம், ஜார்கண்ட், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம் என 8 மாநிலங்கள் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அண்மையின் கடிதம் எழுதியிருந்தார் என கூறப்படுகிறது .