நீட் நுழைவு தேர்வு…13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 23 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பிகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாராட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது. அதில் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!