58
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.
தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது சமூக வலைதள பக்கத்தில், ”நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்கும் போது நாம் வாழ்ந்த தருணங்கள் நம் கண் முன் வந்து போகும். அதுபோல வலி நிறைந்த ஒரு தருணத்தை இயக்குனர் கலையாக படைத்து நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார்” என பதிவிட்டுள்ளார்.